Connect with us

அது எப்படி நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாம்… கணவன் செய்த கேவலமான செயல்… அதிர்ச்சி சம்பவம்…!

Latest News

அது எப்படி நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாம்… கணவன் செய்த கேவலமான செயல்… அதிர்ச்சி சம்பவம்…!

கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசமாக இருக்கும் வீடியோவை எடுத்த கணவன் அதனை சமூக வலைதளங்களில் வெளியீட்டுக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் டோம்பிவிலியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் அவரது கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இது பற்றி அறிந்த அந்த பெண் பிரிந்து வாழும் கணவர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசாருக்கு பல தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதாவது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பெண்ணின் கணவர் அந்த வீட்டில் ஸ்பை கேமரா ஒன்றை மறைத்து வைத்து சென்றிருக்கின்றார். இதனை கவனிக்காத அந்த பெண் தனது கள்ளக்காதலனை அடிக்கடி வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்திருக்கின்றார்.

இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் அப்பெண்ணின் கணவர் அதனை சமூக வலைதள பக்கங்களில் பரப்பி விட்டார். இவை அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து போலீசார் அந்த பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

More in Latest News

To Top