Latest News
ஏரியின் நடுவே மண்டபம் அமைத்து… மலையாள தம்பதியின் ஆடம்பர திருமணம்… வைரல் புகைப்படங்கள்..!
கேரள முறைப்படி மணமக்கள் படகுமூலம் திருமணம் மேடைக்கு அழைத்து வந்து ஏரியின் நடுவே திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக இருப்பது கேரளா. இங்கு அரசுக்கு அதிக அளவு வருவாயை ஈட்டி கொடுப்பதில் முக்கியம் வகிப்பது மலைவாஸ் தளங்களும், நீர்நிலைகளும் தான். குறிப்பாக ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். ஹவுஸ் போர்ட் என்று அழைக்கப்படும் மேற்கூறையுடன் கூடிய குடும்ப படகு பயணத்தை பலரும் விரும்புவார்கள்.
அந்த வகையில் ஹவுஸ் போட் சுற்றுலா கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் கொடிக்கட்டி பறக்கின்றது. இந்த ஏரிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலாப் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்து இருக்கின்றது. இங்கு வரும் பயணிகள் ஹவுஸ் போட்டுகளில் சில நேரங்களில் கேளிக்கை விருந்துகள் நடத்துவது உண்டு.
ஆனால் ஆலப்புழா கைத்தறி ஏரியில் ஒரு ஆடம்பர திருமணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. டெல்லி போலீசில் தடவியல் நிபுணராக பணியாற்றி வருபவர் ஹரிதா. இவர் ஆலப்புழா பொன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணியின் கேப்டனாக இருந்து வருகின்றார். இவருக்கும் சாலக்குடியை சேர்ந்த ஹரிநாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஏரியின் நடுவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கின்றார். இதற்காக மாவட்ட கலெக்டரின் அனுமதியைப் பெற்று பிரத்தியேகமாக திருமண மண்டபம் மற்றும் கலை நிகழ்ச்சி விருந்துகளை ஒரு சிறிய மண்டபம் போன்று செட் அமைத்து தடபுடலாக நடத்தியிருக்கிறார்கள்.
திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி முறை அழகு படுத்தப்பட்டு படகில் மணமக்கள் அழைத்துவரப்பட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏரியின் நடுவே நடந்த இந்த திருமணம் அனைவரையும் வெகுளவு கவர்ந்துள்ளது.