- Homepage
- Latest News
- பாஜக மூழ்கி வரும் டைட்டானிக் கப்பல்…மோடி தலைமையை விமர்சித்த சுப்ரமணிய சாமி…
பாஜக மூழ்கி வரும் டைட்டானிக் கப்பல்…மோடி தலைமையை விமர்சித்த சுப்ரமணிய சாமி…
கடந்த 2019ம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைத்தது பாரதிய ஜனதா கட்சி. அதை விட பிரம்மாண்டமான வெற்றியை பெறும் என 2024ம் ஆண்டிற்கு பிந்தைய தேர்தலுக்குபிந்தைய கருத்து கணிப்புக்கள் சொல்லியது.
ஆனால் முடிவு வந்த பின்னர் அவை எல்லாம் தவிடு பொடியானது. சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமாரின் ஆதரவோடு மீண்டும் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது பாரதிய ஜனதா கட்சி.
மூன்றாவது முறையாக பிரதமராக அரியனையில் ஏறி ஆட்சி செய்து வருகிறார் மோடி. இந்நிலையில் சமீபத்தில் நாடு முழுவதும் நடந்து முடிந்த இடைத் தேர்தல்களில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் பதிமூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத் தேர்தலை நடத்தியது தேர்தல் ஆணையம்.
இதில் ஆளும் தேசிய முற்போக்கு கூட்டணியை விட எதிர்கட்சியான காங்கிரஸின் தலைமையில் இருந்து வரும் இந்தியா கூட்டணி அதிக இடங்களை பிடித்துள்ளது.
தேசிய அரசியலில் இந்தியா கூட்டணியின் இந்த வெற்றி சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி மோடியின் தலைலைமை குறித்த கருத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் பாஜகவில் இருக்கும் நாமெல்லாம் மூழ்கி வரும் டைட்டானிக் கப்பலில் பயணிக்கிறோம் என்று விமர்சித்துள்ளார். அதோடு மோடி தலைமையில் பயணித்தால் இந்த கப்பலில் மேலும் விரிசல்கள் விழுந்து நிரந்தரமாக மூழ்கிவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பின்னடைவை கொடுத்துள்ள நிலையில் சுப்ரமனியன் சுவாமியின் இந்த அதிரடி கருத்துப் பதிவு அக்கட்சியினரை மேலும் அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.