Latest News
குடிநீர் கேட்ட மாணவிகள்… பள்ளி தலைமை ஆசிரியர் சொன்ன அருவருப்பான விஷயம்… அதிரடி ஆக்சன்…!
மாணவிகள் குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் Phoolidumar என்ற பகுதியில் செயல்பட்டு வந்த அரசு இடைநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் கிடைப்பதில் பிரச்சனை இருந்து வந்திருக்கின்றது. இதனால் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் குழுவாக சேர்ந்து குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ண திரிபாதியிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள்.
இதில் கோபமடைந்த ராமகிருஷ்ண திரிபாதி மாணவிகளை சாக்கடைகளை குடிக்க வற்புறுத்தி இருக்கின்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளை மேலும் அசிங்கப்படுத்தும் வகையில் சிறுநீரை குடிக்கும்படி கூறியுள்ளார்.
இதனை அந்த மாணவிகள் தங்களது கிராம தலைவரிடம் கூறி இருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார்கள் மாவட்ட கலெக்டரிடம் கூறிய நிலையில் ராமகிருஷ்ண திரிபாதி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.