இன்ஸ்டாகிராமில் தனது தாயை கொன்று விட்டதாக கூறி அவருக்கு இரங்கல் தெரிவித்து மகன் வெளியிட்ட பதிவால் அவரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் 21 வயதான நிலேஷ் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா.. நான் உங்களை கொன்று விட்டேன்.. மிஸ் யூ.. என்று குறிப்பிட்டு இருக்கின்றார். இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனது தாயைக் கொன்றுவிட்டு அவரது சடலத்தின் பக்கத்திலேயே அமர்ந்திருந்த மகனை போலீசார் கைது செய்தனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை பிரிந்த தாய் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கின்றார். மகனுக்கும் தாய்க்கும் அவபோதும் முரண்பாடு ஏற்பட்டு சண்டை வந்து இருக்கின்றது.
அதேபோல் இந்த முறையும் வாக்குவாதம் ஏற்பட கடைசியில் பெற்ற தாயையே மகன் கொலை செய்திருக்கின்றார். தாயின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் பெண்ணின் முன்னாள் கணவனிடம் உடலை பெற்றுக் கொள்ள சொல்லி போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் அவர் அவரின் உடலை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டதார். பின்னர் அப்பெண்ணின் உடலுக்கு போலீசாரை இறுதி சடங்குகள் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள்.