Latest News
என்னப்பா அசால்ட்டா கைல தூக்கிட்டு போறீங்க… முதலையை ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற நபர்… வைரல் வீடியோ..!
ஊருக்குள் நுழைந்த முதலையை மீட்பு படையினர் மீட்டு அதனை ஸ்கூட்டரில் வைத்து எடுத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குஜராத் மாநிலத்தின் கட்சி அருகே அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இதில் கனமழைக்கு இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.
வெள்ளத்தில் சிக்கி 1200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதே போல தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் சுமார் 20,000 முகாம்களுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். மேலும் விசுவாமித்ரி உள்ளிட்ட 24 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
விசுவாமித்ரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் அணையிலிருந்து 440 முதலைகளில் பெரும்பாலானவை அருகில் உள்ள வதோரா கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டது. முதலைகள் இழுத்துச் சென்று விடுவதால் அப்பகுதியில் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது.
வெள்ளநீர் வடிய வடிய அங்கு புகுந்துள்ள முதலைகளை வனத்துறையினர் மீட்டு வருகின்றனர். 40-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்பு குழுவினர் ஸ்கூட்டரில் அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகின்றது. அந்த ஸ்கூட்டரில் பின்புறம் அமைந்துள்ள நபர் முதலையை கையில் வைத்திருக்க மற்றொரு நபர் சாலையில் வண்டியை ஓட்டி செல்லும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
Two young men took a crocodile found in Vishwamitra river in Vadodara to the forest department office on a scooter🫡
pic.twitter.com/IHp80V9ivP— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 1, 2024