- Homepage
- Latest News
- சீரழியும் இளைஞர் பட்டாளம்!…ஸ்மார்ட் ஃபோன் காரணமா?…செய்தி நிறுவனம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்!….
சீரழியும் இளைஞர் பட்டாளம்!…ஸ்மார்ட் ஃபோன் காரணமா?…செய்தி நிறுவனம் சொன்ன அதிர்ச்சி ரிப்போர்ட்!….
உள்ளங்கையில் உலகம். எது வேண்டுமானாலும் செல் ஃபோன் ஆப்-பில் பார்த்துக்கொள்ளலாம். டவுன்-லோட், அப்-லோட், கட், காப்பி, பேஸ்ட் என மாறிவருகிறது இயல்பு வாழ்க்கை. சரியான விதத்தில் பயன்படுத்தினால் ஸ்மார்ட் ஃபோன்கள் கையில் இருப்பது ஒரு விதமான வரமே.
நல்ல செயல்களுக்காக அதனை உபயோகித்தால் வாழ்க்கையை வேற லெவலுக்கு கொண்டு நிலை நிறுத்து விடும். அத்தகைய சக்தி படைத்த ஆயுதம் போல இருந்து வருகிறது ஸ்மார்ட் ஃபோன்கள் இப்போது.
பச்சிளம் குழந்தைகள் கூட செல்போனை கையில் கொடுத்தால் அழுகையை நிறுத்தி விட்டு சமாதானமாகி விட்டு சிரிக்க தொடங்கி விடுகிறார்களாம். இது பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் நாள் தோறும் வந்த வண்ணமே உள்ளது.
ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துவது குறித்த ஆய்வினை பி.பி.சி. செய்தி நிறுவனம் எடுத்துள்ளது. அதன் ரிப்போர்ட் சற்று அதிர்ச்சி தரும் விதமாக கூட இருக்கலாம். 13 வயது முதல் 18 வயது வரை உள்ள இரண்டாயிரம் இளைஞர்களிடம் எடுத்த சர்வேயின் படி, ஐம்பது சதவீதமானவர்கள் செல் ஃபோன் பயன்படுத்தாத நேரத்தில் குடும்பத்துடன் அதிக நேரம் செல்வழிக்க முடிகிறது, பிற விஷயங்களில் தங்களது கவனத்தை அதிகாமக செலுத்த முடிகிறது என சொல்லியிருக்கிறார்கள்.
செல்ஃபோன்கள் பயன்படுத்தாத போது தான் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர முடிகிறது. அமைதியை உணர முடிகிறது. அதே போல நன்றாக தூங்க முடிகிறது எனவும் சொல்லியிருக்கின்றார்களாம். இதை வைத்து பார்க்கும் போது இப்போது உள்ள இளைஞர்கள் பலருக்கும் ஸ்மார்ட் ஃபோன் சுகமான சுமையாக தான் இருப்பதை உணர வைக்கிறது பி.பி.சி. செய்தி நிறுவனம் கொடுத்துள்ள ரிப்போர்ட்.