Latest News
சட்டினிக்குள் நீச்சல் படித்த எலி…கவனக்குறைவால் நேரயிருந்த சோகம்…வலுக்கும் எதிர்ப்பு…
தெலுங்கானாவில் கல்லூரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட சட்டினிக்குள் உயிருடன் வலம் வந்த எலியை பார்த்தவர்கள் அலறி அடித்து வெளியேறினர். தெலுங்கானா மாநிலம் சுல்தான்பூர் ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக பொறியில் கல்லூரி மாணாவர்கள் வெளியிட்டுள்ள இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியதை அடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஜேஎன்டியூஎச் பல்கலைக்கழக மாணவர்களால் பதிவு செய்யப்பட்ட வீடியோவில், விடுதி கேன்டினில் உணவிற்காக வைத்திருந்த சட்னி நிறைந்த பெரிய பாத்திரத்தில் உள்ளே எலி நீந்தியதை காண முடிந்தது. வெளியான சில மணி நேரத்திலேயே எழுபத்தி ஐந்தாயிரம் பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது இந்த வீடியோ.
லட்சுமி காந்த் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பார்த்தவர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. நீச்சல் அடித்து சட்டினி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை சுற்று வலம் வந்த காட்சிகள் பார்த்தவர்களை பதறச் செய்தது.
சமூக வலைதளங்கள் மூலம் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்தவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் சுல்தான்பூர் ஜேஎன்டியூவில் இந்த நிலை புதிதல்ல. 2016 முதல் 2020 வரையில் தங்களுக்கு தரமான உணவு தினசரி கிடைக்க போராட வேண்டியது இருந்ததாக சொல்லியிருந்தார்.
ஒவ்வொரு நாளும் மெஸ் நிர்வாகத்திடம் வாதிட வேண்டியிருந்ததாக தனது கருத்தில் சொல்லியிருந்தார். சட்டினியில் எலி நீந்திய வீடியோ கிளப்பி விட்ட அதிர்ச்சியை போலவே இவரின் இந்த கருத்தும் மாணவர்கள் பட்ட கஷ்டத்தை பார்த்து கலங்கவைப்பதாக இருந்தது.