ராம்நாத் கோவிட் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதியா…? பேட்டியில் உளறிய கங்கனா… வைரலாகும் வீடியோ…!

ராம்நாத் கோவிட் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதியா…? பேட்டியில் உளறிய கங்கனா… வைரலாகும் வீடியோ…!

ராம்நாத் கோவிட் தான் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்று பேட்டியில் கங்கனா உளறி கொட்டிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பாலிவுட் நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் சர்ச்சையான விஷயங்களை பேசி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றார். அவர் செய்யும் சிறு தவறுகளை கூட நெட்டிசன்கள் உன்னிப்பாக கவனித்து கலாய்த்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறித்து தவறான தவறுதலான தகவல் ஒன்றை வெளியிட்டு ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து கங்கனா ரானவத் இயக்கியுள்ள எமர்ஜென்சி திரைப்படம் வருக செப்டம்பர் 6-ம் தேதி வெளியாகியுள்ளது. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா ரானவத் நடித்திருக்கின்றார்.

இந்த படத்திற்கான ப்ரோமோஷனில் தீவிரம் காட்டி வருகின்றார். அதில் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிக குற்றங்கள் நடைபெற்று வருகின்றது என்று கூறப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் போது நிலைமை தற்போது மாறி இருக்கின்றது. தலித்துகள் ஜனாதிபதியாக இருக்கிறார்கள்.

ராம்நாத் கோவிந்த் இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி என்று தெரிவித்தார். இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் என்று பேட்டி எடுப்பவர் கங்கனா ரானவத்தை திருத்தினார். மேலும், ராம்நாத் கோவிந்தை ராம்நாத் கோவிட் என்று கங்கனா உளறிய வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.