உத்திரபிரதேச மாநிலத்தில் பக்கத்து வீட்டுக்காரனை போலீஸில் மாட்டி விடுவதற்காக தனது 5 வயது மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
உத்தரப்பிரதேச மாநிலம், சாஜகானிபூரில் வசித்து வருபவர் சஞ்சீவ். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தான் விவேக். சஞ்சய் தனது பக்கத்து வீட்டுக்காரரான விவேக் உள்ளிட்ட 8 பேர் மீது தனது குழந்தையை கடத்தி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விசாரணையில் புகார் அளித்த தந்தை சஞ்சீவ் தான் தனது மகனை கொன்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சீவின் மகனான கௌரவுடன், விவேக்கின் மகன் ஆயுஸ் சண்டை போட்டு இருக்கின்றார். இது குறித்து ஆயுஸின் அம்மாவிடம் கூற சென்ற சஞ்சீவி மனைவியை விவேக்கின் மனைவி அடித்திருக்கின்றார். தனது மனைவிக்கு நேர்ந்த அவமானத்தால் கடும் கோபத்தில் இருந்திருக்கின்றார் சஞ்சீவ்.
இதனால் விவேக்கை பழிவாங்க திட்டமிட்டு இருக்கின்றார். இதற்காக தனது மகன் கௌரவை கொன்று அந்த பழியை விவேக் மீது போடுவதற்கு முயற்சி செய்து இருக்கின்றார். இதனால் தனது மனநிலை சரியில்லாத ஐந்து வயது மகன் கௌரவை மருந்து வாங்க அழைத்துச் செல்வதாக ஸ்கூட்டரில் ஆற்றோரம் அழைத்துச் சென்று அங்கிருந்து மகனை ஆற்றுக்குள் தூக்கி வீசி இருக்கின்றார்.
சஞ்சீவ் கொலை செய்த பிறகு வரும் வழியிலேயே விவேக் உள்ளிட்ட தனது பக்கத்து வீட்டாரின் பெயர்களை கத்தியப்படியே வந்திருக்கின்றார். இதனால் மிகுந்த சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் பலமுறை விசாரித்ததில் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார் சஞ்சீவ். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.