Latest News
பொண்ணு பாத்து தர மாட்டேன்னா சொல்றீங்க?….போட்றே கேச…தெறிக்க விட்ட நபர்!….
திருமணம் பந்தம் என்பது ஒரு ஆண், பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. முன்பு எல்லாம் திருமண வயது வந்து தங்களது பிள்ளைகளுக்கு பெற்றோர் அவர்களுக்கு ஏற்றது போல வரன் பார்த்தும், சாஸ்திரம், சம்பர்தாயங்கள் பார்த்தும் திருமணத்தை நடத்தி வந்தனர். பல இடங்களில் இப்போதும் அது நடைமுறையில் இருக்கிறது.
தெரிந்தவர்கள், உறவனர்கள் மூலமாக தங்களது வாரிசுகளுக்கான மணவாழ்க்கையை தேர்வு செய்து கொடுத்து வந்தனர். நாட்கள் செல்லச்செல்ல தரகர்களின் பங்களிப்பு ஆதீக்கம் செய்ய துவங்கியது. அதன் பின்னர் ஏராளமான திருமண தகவல் மையங்களும் தலை தூக்க துவங்கியது. இவர்களின் மூலமும் திருமண நிகழ்வுகள் அதிகமாக நடக்கத்துவங்கியது.
தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது வீட்டிலிருந்தே ஆன்-லைன் மூலம் தங்கள் விவரங்களை பதிவு செய்துவிட்டு தங்களின் வாழ்க்கைத்துணையை தேடி பிடித்து வரத்துவங்கி விட்டனர் இந்த கால இளைஞர்கள்.
இப்படி மேட்ரிமோனியில் தன்னை பற்றிய சுய விவரகங்களை பதிவு செய்து விட்டு, குறிப்பிட்ட மேட்ரிமோனி நிறுவனத்திற்கு மாத சந்தாவையும் தவறாமல் கட்டி வந்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த நபர்.
தனது பதிவுக்கான சரியான பதிலை சொல்லாமல் தட்டிக்கழித்து வந்ததாக மேட்ரிமோனி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து விட்டாராம் அந்த நபர்.நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர் கட்டிய சந்தா தொகை நாலாயிரத்தி நூறு, வழக்கு செலவுக்காக மூவாயிரம் ரூபாய், இழப்பீடு தொகையாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய், என மொத்தமாக முப்பத்து இரண்டாயிரத்து நூறு ரூபாயை வழங்க சொல்லின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது