---Advertisement---

கையில குடை வச்சிக்குங்க இந்த ஊர்காரங்க எல்லாம்…ஆரஞ்ச் அலர்ட் அறிவிச்சாச்சு…

Published on: June 25, 2024
Rain
---Advertisement---

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு நேரத்தில் பெய்த மழை இயல்பு வாழ்க்கையை பாதிக்கச்செய்தது.

இந்த திடீர் மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளது. வாட்டி வதைத்து வந்த வெயில் ஆக்ரோஷம் குறைவாகவும் தெரிகிறது.

மேற்கு திசை காற்றின் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போல திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

rain 2

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதே நேரத்தில் நகரின் சில இடங்களில் இரவு நேரத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

25, 26 இந்த இரண்டு தேதிகளில் தமிழகம் மற்றும் புதிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் சொல்லியுள்ளது.

அடுத்த நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை முப்பத்தி ஆறு முதல் முப்பத்தி ஏழு டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் அதேபோல குறைந்த பட்ச வெப்ப நிலை இருபத்தி ஏழு முதல் இருபத்தி எட்டு டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

পড়তে ভুলবেন না

ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ் பிறந்தநாள் புகைப்படம்

நடிகர் ரவி மோகன் உடனான உறவு: கெனிஷா பிரான்சிஸின் வைரல் பிறந்தநாள் பதிவு மற்றும் உருக்கமான விளக்கம்!

டாக்டர் ஸ்ரீலீலா தனது எம்பிபிஎஸ் பட்டத்துடன் இருக்கும் புகைப்படம்

டாக்டர் ஸ்ரீலீலா: மும்பை டி.ஒய் பாட்டீல் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார் நடிகை ஸ்ரீலீலா!

ஏழுமலை 2 அப்டேட் கொடுக்கும் நடிகர் அர்ஜுன்

ஏழுமலை 2 படத்தின் கதை தயார்: இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என நடிகர் அர்ஜுன் அறிவிப்பு!

மும்பை மெலடி ரோடு மற்றும் ஜெய் ஹோ இசைத் திட்டம்

மும்பை கடற்கரைச் சாலையில் இந்தியாவின் முதல் ‘மெலடி ரோடு’: வாகனங்கள் செல்லும்போது ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பாடல்!

ஜென்சன் திவாகர் பேட்டி மற்றும் எதார்த்தமான கதாபாத்திரங்கள்

“பணம் வந்தவுடன் எலைட் ஆக முடியாது”: எதார்த்தமான கதாபாத்திரங்கள் குறித்து ஜென்சன் திவாகர் விளக்கம்!

கட்டிப்பிடித்தல் தினம் 2026 மற்றும் அதன் நன்மைகள்

பிப்ரவரி 12 சர்வதேச கட்டிப்பிடித்தல் தினம் (Hug Day): ஆரோக்கியம் மற்றும் உளவியல் நன்மைகள் குறித்த தொகுப்பு!