பாரா ஒலிம்பிக் போட்டி… வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை… குவியும் வாழ்த்துக்கள்…!

பாரா ஒலிம்பிக் போட்டி… வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை… குவியும் வாழ்த்துக்கள்…!

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா வெண்கல பதக்கம் வென்று இருக்கின்றார்.

மாற்றுத்திறனாளிக்கான 17வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகின்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 4,400 வீராங்கனைகள் பங்கேற்றி இருக்கிறார்கள். இந்தியா சார்பில் 84 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்எச்1 பிரிவுக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 8 வீராங்கனைகள் பங்கேற்ற இறுதிப்போட்டியில் 211.1 பெற்று மூன்றாம் இடம் பிடித்தார் ரூபினா. மேலும் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

ஈரான் வீராங்கனை சரே ஜவன்மர்டி 236.8 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கமும், துருக்கி வீராங்கனை அய்சல் 231.1 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கமும் வென்றிருக்கின்றார். பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கம் என ஐந்து பதக்கங்களை பெற்றிருக்கின்றது.