Connect with us

லேசாக மோதிய ஓலோ டிரைவர்… WWF-ஐ போல் தூக்கி போட்டு பந்தாடிய ஆடி கார் உரிமையாளர்… வீடியோ…!

Latest News

லேசாக மோதிய ஓலோ டிரைவர்… WWF-ஐ போல் தூக்கி போட்டு பந்தாடிய ஆடி கார் உரிமையாளர்… வீடியோ…!

சொகுசு கார் மீது ஓலா கேப் மோதியதால் ஆத்திரம் அடைந்த உரிமையாளர் கால் டாக்ஸி டிரைவரை தூக்கி போட்டு பந்தாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சொகுசு கார் மீது ola கேப் டிரைவர் மோதியிருக்கின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆடி கார் உரிமையாளர் கால் டாக்ஸி டிரைவரை திரைப்பட பாணியில் தூக்கி வீசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றது. இந்த வீடியோ 30 வினாடிகள் கொண்டதாக உள்ளது.

குடியிருப்பு வளாகப் பகுதிகளில் ஆடி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. பின்னால் ola நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கும் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. உரிமையாளர் திடீரென்று பிரேக் போட்டதால் பின்னால் வந்த டாக்ஸி டிரைவர் சடனாக பிரேக் போட முடியாமல் கார் லேசாக முன்பு இருந்த பம்பரில் மூழ்கி இருக்கின்றது.

இதனால் ஆத்திரமடைந்த ஆடி காரில் இருந்தவர் இறங்கி வந்து ஒலா கார் ஓட்டுனரை அப்படியே தூக்கி வீசி தாக்குகின்றார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மும்பையில் உள்ள காட்கோபரில் இருக்கும் ஒரு மாலுக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் நுழைவாயிலில் நடந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். சமூக வலைதள பக்கங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒரு பயனர் இந்த திமிரு பிடித்த பையன் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

More in Latest News

To Top