Latest News
புதிய வகை அமீபா…பயம் வேண்டாம்…சுகாதார துறை அறிவுரை…
கேரளாவில் புதிய வகை மூளையை தின்னும் அமீபா பரவி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பேர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த புதிய வகை அமீபா பலருக்கும் பயத்தை உண்டாக்கியுள்ளது. இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை தின்னும் நோய் தொற்றால் கேரளாவின் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கடிதம் அனுப்பியுள்ளார். தேங்கி இருக்கும் நீரில் குளிப்தைப் பொது மக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். நீர் நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச் சூழலின் சுகாதாரம் பேணப்பட வேண்டும் எனவும் அவர் கடித்ததில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் இந்த புதிய வகை அமீபாவின் பரவலை மனதில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதோடு, பொது மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து பேசியிருந்த சென்னை மாநகர ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் யாரும் பீதியடைய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். கேரளாவில் சமீபத்தில் விதவிதமான காய்ச்சல் பரவி வந்த நிலையில் புதிய வகை அமீபா அச்சத்தை ஏற்படுத்தியது.