cricket news
எம்.எஸ் தோனிய ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன்… யுவராஜ் சிங் தந்தை பளிச்…!
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை எம் எஸ் தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற் பந்துவீச்சாளராகவும் திகழ்ந்திருக்கின்றார். இவர் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வெல்வதற்கும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தவர்.
இவரின் தந்தை யோகராஜ் சிங் இவர் தொடர்ந்து எம் எஸ் தோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அளித்தவர் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டி இருக்கின்றார். மேலும் எம் எஸ் தோனி குறித்து அவர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இது தொடர்பாக யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் தெரிவித்திருந்ததாவது “நான் எம் எஸ் தோனியை மன்னிக்க மாட்டேன். கண்ணாடியில் அவரது முகத்தை பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் எனது மகனுக்கு எதிராக என்ன செய்தார் என்பதெல்லாம் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இதை எனது வாழ்நாளில் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன். நான் எனது வாழ்நாளில் இரண்டு விஷயங்களை செய்தது கிடையாது. முதல் விஷயம் எனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒருபோதும் மன்னித்தது கிடையாது. இரண்டாவது எனது குடும்ப உறுப்பினர்களுக்காக இருந்தாலும் சரி அல்லது குழந்தைகளாக இருந்தாலும் சரி ஒருபோதும் என் வாழ்வில் கட்டிப் பிடிக்க மாட்டேன்” என்று தெரிவித்து இருக்கின்றார்.