Latest News
நான் எங்கேயும் ஓடிப்போகல… இங்கதான் இருக்கேன்… மௌனம் கலைத்த நடிகர் மோகன்லால்…!
நான் எங்கும் ஓடி ஒளியவில்லை இங்கேதான் இருக்கின்றேன் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்து இருக்கின்றார்.
ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக வெடித்திருக்கின்றது. மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் விலகி இருந்தார். இதை தொடர்ந்து பலரும் அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில் இந்த செய்தியாளர்களை சந்தித்து இருக்கின்றார்.
அப்போது பேசிய அவர் மலையாள திரையுலகில் பல நடிகர்கள் மீது பாலியல் புகார் வைக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தை குறை கூறுவது சரியில்லை. நான் எங்கேயும் ஓடி ஒழியவில்லை. இங்கேயேதான் இருக்கின்றேன். குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு இல்லை.
மலையாள திரை உலகம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். பாலியல் புகார் தொடர்பாக அரசு தன் கடமையை செய்யும் என்று நம்புகிறேன். மலையாள திரைப்பட நடிகர் சங்கமான ‘அம்மா’ மீது அவதூறு பரப்பாதீர்கள். தற்போது எழுந்துள்ள பிரச்சனையிலிருந்து மலையாள திரை உலகை நாம் காக்க வேண்டும்.
வயநாடு போன்ற பேரிடர்களின் போது மக்களுக்கு அம்மா சங்கம் பல உதவிகளை செய்தது. பாலியல் புகார்கள் தொடர்பாக அனைத்து துறைகளிலும் மாற்றம் தேவைப்படுகின்றது. இது குறித்து கேரள திரையுலகம் கட்டாயம் பதில் சொல்லும் என்று தெரிவித்திருந்தார். பாலியல் புகார் தொடர்பாக மோகன்லால் பேசியதை தொடர்ந்து செய்தியாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய மோகன்லால் நீதிமன்றத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நான் எப்படி பேச முடியும். பாலியல் புகார் தொடர்பாக அரசும் நீதிமன்றமும் தங்கள் கடமையை செய்கின்றனர். ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் பரிசீலிக்கப்படுகின்றது. விசாரணைக்கு ஒத்துழைப்பும் இந்த விஷயங்களை சரி செய்ய மட்டுமே நான் இங்கு வந்திருக்கின்றேன்.
நான் ஹேமா கமிட்டியின் அறிக்கையை படிக்கவில்லை. மலையாள திரை துறையை சார்ந்த 21 சங்கங்கள் இருக்கும் போது அம்மா சங்கத்தை மட்டும் குறை கூற வேண்டாம். அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள். விசாரணை நடைபெற்று வருகின்றது என்று அவர் தெரிவித்திருந்தார்.