Latest News
மீண்டும் தனியார் மையமாகும் மதுகடைகள்… ஆண்டுக்கு 2000 கோடி வருவாய்… வெளியான தகவல்…!
ஆந்திராவில் மது கடைகள் தனியார் மையமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மதுபான கடைகளை அரசு மது கடைகளாக மாற்றினார். சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக தற்போது பொறுப்பேற்ற பிறகு புதிய மதுபான கொள்கைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காலால் துறை அதிகாரிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் மதுபான கொள்கை குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்கள். அதில் தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக லாபம் கிடைப்பது தெரிய வந்திருக்கின்றது.
இதை பின்பற்ற முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றது. மதுபான கடைக்கு விண்ணப்பம் செய்ய இரண்டு லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மதுபானம் கடைகளுக்கு 40 விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் அரசுக்கு 2000 கோடி வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் அரசு மதுபான கடை என்பதால் அருகில் பார் வைக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் மது குடிப்பவர்கள் சாலைகளில் மது குடித்துவிட்டு சாலைகளில் தகராறில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.