Latest News
அறைக்குள் நுழையும்போதே ரத்த வெள்ளத்தில் இருந்த மருத்துவர்… வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…!
அறைக்குள் நுழையும் போதே மருத்துவர் ரத்த வெள்ளத்தில் இருந்ததாக சஞ்சய் ராயின் வக்கீல் கவிதா சர்க்கார் நீதிமன்றத்தில் வாதாடி இருக்கின்றார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ இடம் கைமாற்றப்பட்டு பலகட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சய்ராயின் ப்ளூடூத் ஹெட்செட் செமினார் ஹாலில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் அடிப்படையிலும் சஞ்சீவி ராய்தான் குற்றவாளி என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் அவர் நிரபராதி என்பதை நிறுவும் வகையில் அவரின் வக்கீல் கவிதா சர்க்கார் சில விஷயங்களை தெரிவித்து இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது சஞ்சய் ராயிடம் உண்மையை கண்டறியும் பாலிகிராப்ட் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த சோதனையில் சஞ்சய் ராயிடம் 10 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் பெண்ணை கொலை செய்த பிறகு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நீங்கள் கேட்கும் கேள்வியே தவறு, நான் கொலை செய்யவே இல்லை என்று தெரிவித்தார்.
உண்மை கண்டறியும் சோதனையில் நான் செமினார் ஹாலுக்கு செல்லும்போது அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் சுயநினைவு இன்றி கிடந்ததாகவும் அறிக்கையில் தெரிவித்திருந்தார். அந்த பாலிகிராஃப்ட் டெஸ்ட் அறிக்கை படி சம்பவம் நடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு செமினார் ஹாலுக்குள் நுழையும் போது அந்த பெண் மருத்துவர் மயங்கிய நிலையில் உடல் முழுவதும் ரத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகின்றது.
எனவேதான் அவர் அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்று தெரிவித்திருந்ததாக கவிதா சர்க்கார் கூறியிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் ஏன் இதை முதலிலேயே சஞ்சய் ராய் கூறவில்லை. போலீஸ் கைது செய்த போது நான் தான் செய்தேன் என்று ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்பினார்.
சஞ்சய் ராய் பயத்தில் இருந்ததாகவும் தான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள் என்று எண்ணி இதுபோன்று கூறியதாக தெரிவித்திருக்கின்றார். யாரோ அவருக்கு முன்பாகவே அந்த இடத்திற்கு சென்று இந்த சம்பவத்தை செய்திருப்பதாகவும் ,உண்மையான குற்றவாளி வேறு எங்கோ ஒளிந்து இருக்கின்றான்” என்று கவிதா சர்க்கர் தெரிவித்து இருக்கின்றார்.