Latest News
பெண் மருத்துவர் கொலை வழக்கு… மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்… வைரலாகும் வீடியோ…!
பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர் ஜி கர் அரசு மருத்துவமனை கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி செமினார் ஹாலில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சடலமாக விற்கப்பட்ட சம்பவம் அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மருத்துவ துறையை சேர்ந்த பலரும் போராட்டங்களை கையில் எடுத்து வந்தனர். அது மட்டும் இல்லாமல் அந்த பெண் மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையை இன்னும் போராட்டங்கள் கொல்கத்தாவில் ஓய்ந்த பாடுயில்லை.
பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட பெண் மருத்துவர் நீதி வேண்டிய பாலியல் தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராடி வருகிறார்கள்.
நீதி வேண்டும் என்ற வாசகத்தை மெழுகுவர்த்தியினால் அடுக்கி வைத்து கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதேபோன்று கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மேற்குவங்க மாநில ஆளுநர் சிவி ஆனந்த் போஸ் மெழுகுவத்தி ஏற்றி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றார்.
#WATCH | Kolkata, West Bengal: Protestors at RG Kar Medical College & Hospital carry out a candle protest against the rape-murder incident. pic.twitter.com/FvExw0jYre
— ANI (@ANI) September 4, 2024