இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல பேரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கலாம் இன்று வரை. ஆனால் அவற்றில் கூர்ந்து கவனிக்காமல் கடந்த செல்ல முடியாத பெயர்களில் முக்கிய இடம் பெறுவது தெண்டுல்கர், தோனி, மற்றொரு பெயர் கோலி. இவரின் சாதனைகளை பட்டியலிட்டு பார்த்தால் ஆச்சரியப்பட வைத்து விடுவார்.
டெஸ்ட், ஒரு நாள், இருபது ஓவர் என சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். இக்கட்டான சூழலில் இந்திய அணி சிக்கிய போதெல்லாம் இவரது அதிரடியாலும், அபார திறமையாலும் அணியை மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பல முறை.
கடந்த ஆண்டு நடந்த ஐம்பது ஓவர் உலகக் கோப்பையில் அதிக ரன்களை விளாசினார். அதே நேரத்தில் சமீபத்தில் இந்திய அணி கோப்பையை வென்று அசத்திய இருபது ஓவர் இறுதிப் போட்டியில் மட்டுமே இவர் விஸ்வரூபம் எடுத்தார்.
இவரது நிதானமான ஆட்டமே இந்திய அணியின் வெற்றிக் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது. கோப்பையை வென்றதுமே இருபது ஓவர் சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் கோலி.
உலகக்கோப்பைய வென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் கோலி. 21.07 மில்லியன் லைக்குகளை அந்த படம் பெற்றது. ஆசிய அளவில் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகள் வாங்கியதாக இது மாறியுள்ளது.
21.01 மில்லியன் லைக்குகளை பெற்று BTS உறுப்பினர் Vயினுடையே பதிவு இரண்டாவது இடத்தில் உள்ளது. விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்தவர் கோலி, இருபது ஓவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் இன்ஸ்டாவில் சாதனை படைத்ததன் மூலம் கிரிக்கெட்டில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.