Anshuman gaekwad
Anshuman gaekwad

கோரிக்கை வைத்த ஜாம்பவான்…அள்ளிக்கொடுத்து அதிரடி காட்டிய பிசிசிஐ…

சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்களுக்கு நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இது வரை வழங்கப்பட்ட பரிசுத் தொகையிலே இது தான் அதிகப்படியானது.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவானும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான கபில் தேவ் ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரான அன்சுமன் கெய்க்வாட் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகீட்சை பெற்று வருகிறார்.

இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இவர் இருந்துள்ளார். பல தொடர்களில் வென்று சாதனை படைத்திருந்தது இந்திய அனி அந்த நேரத்தில்.

Jaisha Kapildev
Jaisha Kapildev

கபில் தேவ் விடுத்த கோரிக்கையில் அன்சுமனுக்கு உதவி கிடைக்க வேண்டும் என சொல்லியிருந்தார். தனது ஓய்வூதியத்தை அவருக்கு கொடுக்க இருப்பதாக சொல்லியிருந்ததோடு, முன்னாள் வீரர்கள் தங்களின் குடும்பத்தினரின் ஒப்புதலோடு முடிந்த அளவிலான உதவிகளை செய்யுமாறு கேட்டிருந்தார்.
இந்நிலையில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் அன்சுமன் கெய்க்வாடிற்கு உதவித் தொகையை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா, அன்சுமன் கெய்க்வாட்டிற்கு ஒரு கோடிரூபாயை உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்தார். இதனை உடனடியாக சென்றடைய வேண்டும் என்பதில் ஜெய்ஷா தீவிரம் காட்டியுள்ளார். ரசிகர்களை மகிழ்வித்த கிரிக்கெட் முன்னாள் வீரருக்கு உரிய நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் உதவியுள்ள செய்தி கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.