சோப்புத்திருட்டை தடுக்க ஹோட்டல் நிர்வாகம் கையாண்ட புதுயுக்தி… வேற லெவல் யோசனை போங்க…!

சோப்புத்திருட்டை தடுக்க ஹோட்டல் நிர்வாகம் கையாண்ட புதுயுக்தி… வேற லெவல் யோசனை போங்க…!

ஹோட்டலில் சோப்பு திருட்டை தடுப்பதற்கு ஹோட்டல் நிர்வாகம் புதுயுக்தி ஒன்றை கையாண்டிருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பொது இடங்களில் இருக்கும் பொருள்களை மக்கள் திருடி செல்வது வழக்கம் தான். அதாவது பொது இடங்களில் குடி தண்ணீருக்காக வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் ஒரு சங்கிலி போட்டு டம்ளரை இணைத்து இருப்பார்கள். ஏனென்றால் அதை யாரும் திருடிவிட்டு சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான்.

அது மட்டுமா இரயிலில் பாத்ரூமில் பயன்படுத்தப்படும் பக்கெட்டையும் சங்கிலி போட்டு கட்டி வைத்திருப்பார்கள். அரசு நிர்வாகம் சார்பாக பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை யாரும் திருடிவிட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கும்.

அதே போன்று ஒரு ஹோட்டலில் சோப்பை யாரும் எடுத்துவிட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக ஹோட்டல் நிர்வாகம் புது யுக்தி ஒன்றை கையாண்டு இருக்கின்றது. அதாவது சோப்பின் நடுவே துளையிட்டு அதை கையிற்றால் கட்டப்பட்டு அங்கு தொங்க விடப்பட்டிருக்கின்றது.

இதை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். இந்த வீடியோ ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விருப்பத்தை பெற்று இருக்கின்றது. சிலர் இந்த தொழில்நுட்பம் இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கிண்டலாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Vijay Katoch (@stuntsoul)