Latest News
உஷார் மாமே!…ஆரஞ்சு அலர்ட் சொல்லியாச்சு!…சரி எங்கேல்லாமாம்?
தமிழகத்தில் தற்போது ஒரு சில மாவட்டங்களில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
அதன் பின்னர் வெயில் அப்படியே ஜுன், ஜுலை மாதங்களில் குறைய துவங்கி காற்று வீச ஆரம்பித்து பின்னர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை காலமாக மாறும்.
தென்மேற்கு பருவ மழை துவங்கி விட்ட போதிலும் அதில் தமிழ் நாட்டிற்கு வடகிழக்கு பருவ மலையை போல பெரிய தாக்கத்தை அதிகம் ஏற்படுத்தியதில்லை இதுவரை. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தட்ப, வெட்ப சூழ்நிலை மாறி, மாறி அமைந்து வருகிறது.
குறிப்பாக சென்னை வாசிகளின் நிலை தான் அதிகம் கவலைக்கிடமாக மாறியுள்ளது. கோடை மழையெல்லாம் அதிகமாக சென்னை வாசிகள் பார்க்காமலேயே இருந்து வந்திருப்பார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அப்படி அல்ல வெயில் வறுத்தெடுக்கும் என நினைத்த நேரத்தில் திடீர், திடீரென மழை பெய்து வந்தது. அதுவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் இரவு நேரத்தில் கொட்டித்தீர்த்தது கனமழை.
தற்போது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தி அறிக்கையின் படி இன்றும் , நாளையும் நீலகிரி, கோவை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
அதே போல தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கண்ணியாகுமரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் வானிலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது எனவும் சொல்லப்பட்டுள்ளது.