கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றி இருபத்தோரு பேர் உயிரிழந்த சோக சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது குறித்த விசாரணை மேற்கொண்ட சிறப்பு நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ள்து. இதன் மீதான விசாரணை இம்மாதம் பன்னிரெண்டாம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
போலே பாபா உத்திரபிரதேச மாநிலத்தில் நடத்திய ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் இரண்டரை லட்சத்திற்கு மேலான நபர்கள் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது.
என்பத்தி எட்டாயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அளவுக்கு அதிகமான எதிர்பாராத கூட்டத்தால் தான் இந்த விபத்து நடந்ததாக சிறப்பு நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாபாவை தவிர நிகழ்ச்சியை ஒருங்கிணைதத ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்தது தனது காலடி மண்னை எடுத்துக் கொள்ள பாபா அழைத்திருக்கிறார். பின்னர் அவர் புறப்பட்டு விட்டார். மண்னை எடுக்க கூட்டத்தினர் முண்டியடுத்து சென்றதால் நிலை தடுமாறி பலர் கீழே விழுந்திருக்கின்றனர்.
இவர்கள் மீது பலரும் ஏறிச்சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர் ஒருவர் இதை எல்லாம் சொலியிருந்தார்.
இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்த விபத்து சம்பவத்தில் நூற்றி இருபத்தி ஓரு பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலனோர் பெண்கள்.