Latest News
இனி வாழ்றதுக்கு ஒண்ணுமே இல்ல… மூழ்கி போன ஆடி கார்… கவலையாக பதிவிட்ட குஜராத் நபர்..!
தன்னுடைய காஸ்ட்லியான மூன்று கார்களும் மழை வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படத்தை வெளியிட்டு மனவேதனையை பகிர்ந்திருக்கின்றார் குஜராத்தை சேர்ந்தவர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகின்றது. வதோரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலை நீர் தேங்கி இருக்கின்றது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் 18,000 மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு இருக்கின்றனர்.
மழை தொடர்பான விபத்தில் மொத்தம் இதுவரை 29 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகஸ்டு 30-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மழை காரணமாக 3 கார்கள் நீரில் மூழ்கியதில் தனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
வதோராவில் வசித்து வரும் நபர் தனது 3 கார்கள் வெள்ளத்தில் மூழ்கிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் மாருதி சுஸுகி சியாஸ், ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் 50 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகும் ஆடி ஏ6 ஆகிய கார்கள் ஒரே இரவில் பெய்த கனமழையால் சேதம் அடைந்துள்ளது. இனி வாழ்வதற்கு எதுவும் இல்லை.. என்னிடம் இருந்த மூன்று கார்களும் போய்விட்டன.. என்று தலைப்பு போட்டு அந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றார்.