Connect with us

கடைக்கு வந்த மாணவிகளுக்கு ஐ லவ் யூ… உரிமையாளருக்கு விழுந்த தர்மஅடி… வைரல் வீடியோ…!

Latest News

கடைக்கு வந்த மாணவிகளுக்கு ஐ லவ் யூ… உரிமையாளருக்கு விழுந்த தர்மஅடி… வைரல் வீடியோ…!

கடைக்கு வந்த மாணவிகளிடம் உரிமையாளர் ஐ லவ் யூ சொன்னதால் அவரை இழுத்துப் போட்டு மாணவிகள் அடித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இப்போது உள்ள சூழலில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது. எங்கு சென்றாலும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இதனால் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கே பெற்றோர்கள் பயப்படும் சூழல் உருவாகி இருக்கின்றது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் திட்வானா பகுதியில் உள்ள குச்சுமான் நகரில் மொபைல் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு சில மாணவிகள் ரீசார்ஜ் செய்வதற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த கடையில் உரிமையாளர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டிருக்கின்றார். மேலும் போனை ரீசார்ஜ் செய்ய வந்த மாணவிகளிடம் ஐ லவ் யூ என்று கூறி அவர்களை தொந்தரவு செய்து இருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் சிறுமிகளிடம் மோசமாகவும் நடந்து கொண்டிருக்கின்றார். இதனால் கோபமடைந்த அந்த மாணவிகள் கடையின் உரிமையாளரை ரோட்டிற்கு இழுத்து வந்து அடித்து இருக்கின்றனர். இந்த வீடியோவானது  தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதை பார்த்த பலரும் இப்படிதான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று தங்களது கமெண்ட்களை கூறி வருகிறார்கள்.

More in Latest News

To Top