Connect with us

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு… சுங்க சாவடி கட்டணம் ரத்து… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Latest News

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு… சுங்க சாவடி கட்டணம் ரத்து… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூறப்படுகின்றது.

அதன்படி இன்று முதல் வருகிற 19-ம் மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் வழித்தடத்தை கடக்கும் பயணிகள் சுங்க கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பான அறிவிப்பை மாநில பொதுப்பணித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மும்பை பெங்களூரு மற்றும் மும்பை கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கு ஆர்டிஓ அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவல்துறையிடம் இருந்து அனுமதி சீட்டைப் பெற வேண்டும்.

இதற்கான படிவத்தையும் அம்மாநில பொதுப்பணித்துறை வெளியிட்டு இருக்கின்றது. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி விழாவிலும் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொங்கன் பகுதியில் உள்ள தங்கள் சொந்த இடத்திற்கு செல்வது வழக்கம். இதனால் மகாராஷ்டிரா அரசு இதுபோன்ற ஒரு சலுகையை வழங்கி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

More in Latest News

To Top