Latest News
இனி இதுக்கு கூட 10 ரூபாய் கொடுக்க வேண்டாம்… பக்தர்களுக்கு இலவசம்… திருப்பதி வெளியீட்டு அறிவிப்பு…!
திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருநாமம் போட இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது.
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் நெற்றியில் நாமதுடன் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவில் வளாகத்தில் திருநாமம் இடுவதற்கு பக்தர்களிடம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகின்றது. சில பக்தர்களை திருநாமம் இடுபவர்கள் அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமம் இட்டு அதிக அளவில் பணத்தை பிடுங்கி வருகிறார்கள்.
இதனை தவிர்ப்பதற்காக ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் நேற்று தொடங்கி வைத்தார். ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக திருநாமம் செலுத்தி வருகின்றனர்.
இதனால் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி திருநாமம் இடவேண்டிய தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். கோயில் உண்டியலில் ரூபாய் 125 கோடியே 67 லட்சம் காணிக்கை வசூலாகி இருக்கின்றது. ஒரு கோடியே 6 லட்சம் லட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன. நடந்து வரும் பக்தர்களுக்கு விரைவில் திவ்யதர்ஷன டோக்கன் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.