Latest News
தெலுங்கானாவில் வெள்ளப்பெருக்கு… வீட்டு மொட்டை மாடியில் சிக்கித் தவிக்கும் நபர்… வைரல் வீடியோ…!
தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வீட்டு மொட்டை மாடியில் ஒருவர் சிக்கி தவிக்கும் நபர் தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கின்றன. குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளை நீரில் மூழ்கியுள்ளது.
ஆந்திராவைப் போல அண்டை மாநிலமான தெலுங்கானாவிலும் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு மழை பாதிப்பு ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் அடிலாபாத், கமாரெட்டி, விகராபாத் உள்ளிட்ட மாவட்டங்களும் பெருமளவு பாதிக்கப்பட்டு இருக்கின்றது.
தலைநகர் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்நிலையில் கம்மம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கினர். வீடு தண்ணீரில் மூழ்கி நிலையில் மொட்டை மாடியில் அத்தியாவசிய பொருட்களை வைத்துவிட்டு ஒருவர் அங்கும் இங்குமாக நடக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.