Latest News
மகளின் தலையில் கேமரா… 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தை… காரணம் என்ன தெரியுமா..?
தந்தை ஒருவர் தனது மகளின் தலையில் கேமராவை மாற்றிவிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணி நேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்தப் பெண் பேட்டி அளித்துள்ளார்.
இந்த வீடியோவானது இணையத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கின்றது. அதில் அந்த பெண் தனது பாதுகாப்புக்காக தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொருத்தியுள்ளார் என்றும் இந்த கேமராவிற்கான ஆக்சஸ் உடன் வீட்டில் இருந்தபடியே அவர் நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணிப்பு வருகிறார் என்று அந்த பெண் கூறி இருந்தார்.
இது உங்களுக்கு அசௌரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த அந்த இளம்பெண் எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. அவர் எது செய்தாலும் எனது நல்லதுக்கு தான் இருக்கும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். இருப்பினும் இது போன்ற செய்வது மிகவும் கேவலமான செயல் என்று பலரும் அந்த பெண்ணின் தந்தையை விமர்சித்து வருகிறார்கள்.
Pakistan🫡😭
pic.twitter.com/Hdql8R2ejt— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 6, 2024