Latest News
ஆபீஸ் நேரம் முடியறதுக்கு 1 நிமிடம் நேரத்திற்கு முன்பே கிளம்பிய ஊழியர்… நிறுவனம் விடுத்த வைரல் நோட்டீஸ்…!
ஆபீஸ் நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் முன்பு கிளம்பிய ஊழியருக்கு நிறுவனம் கொடுத்த நோட்டீஸானது தற்போது வைரலாகி வருகின்றது.
கொடுக்கும் சம்பளத்திற்கு ஊழியர்களிடம் முடிந்த அளவு வேலை வாங்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி. இதனை கார்ப்பரேட் நிறுவனங்கள் கண்ணும் கருத்துமாக காத்து வருகிறார்கள். இதனை பலரும் உணர்ந்து இருப்பார்கள். கதவோடு கதவாக கைரேகை மெஷினை இணைத்து ஊழியர்களை அறைக்குள் வைத்து அடைத்து 8 மணி நேரம் வேலைக்கு பின்பு தான் வெளியில் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அடிமை முறையை பலரும் வைத்து வருகின்றார்கள்.
அந்த வகையில் வேலை நேரம் முடிய ஒரு நிமிடம் முன்னதாக சென்று ஊழியருக்கு நிறுவனம் எச்சரிக்கை விடுத்து அனுப்பி இருக்கும். நோட்டீஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரெட்டிட் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வரும் அந்த போஸ்டில் உங்கள் வேலை நேரம் மாலை 5 மணிக்கு முடிகின்றது.
ஆனால் நீங்கள் அதுவரை காத்திருப்பது கிடையாது. எல்லோரும் ஐந்து மணிக்கு தான் என்பது விதிமுறை. நீங்கள் ஒரு நிமிடம் முன்பாக 4.59 மணிக்கு கிளப்பி விடுகிறீர்கள். இது பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருவதை நாங்கள் கவனிக்கிறோம். இனியும் இதை பழக்கமாக்கிக் கொள்ளாதீர்கள் என்று தெரிவித்து இருக்கின்றார். இந்த நோட்டீஸ் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.