அடகு கடையில் இருந்து மீட்கப்பட்ட நகை… ஒரே நொடியில் பறித்துச்சென்று திருடன் அதிர்ச்சி வீடியோ…!

அடகு கடையில் இருந்து மீட்கப்பட்ட நகை… ஒரே நொடியில் பறித்துச்சென்று திருடன் அதிர்ச்சி வீடியோ…!

அடகு கடையில் இருந்து மீட்கப்பட்டு வந்த நகையை வயதான தம்பதியிடமிருந்து திருடன் பறித்து சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

புனேவில் பேரனுக்கு வடா பாவ் வாங்க வண்டியை நிறுத்திய வயதான தம்பதியிடமிருந்து 4.95 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை ஒரு திருடன் திருடிக் கொண்டு ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது .

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தசரத் பாபுலால் மற்றும் ஜெய் ஸ்ரீ என்ற மூத்த தம்பதியினர் அடகு கடையிலிருந்து ரூபாய் 4.95 மதிப்பிலான தங்களது தங்க நகைகளை மீட்டுக் கொண்டு வந்தனர். அப்போது வழியில் பேரனுக்கு வடா பாவ் வாங்குவதற்காக அருகில் உள்ள கடையின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருக்கிறார்கள்.

அந்த சமயத்தில் அங்கு வந்த திருடன் அசந்த நேரம் பார்த்து ஜெய்ஸ்ரீ வைத்திருந்த பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். ஜெயஸ்ரீ அவனை துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை தேடி வருகிறார்கள் இது தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.