Latest News
நடனம் ஆடிக் கொண்டிருந்த போதே திடீரென சரிந்து விழுந்த தலைமை காவலர்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!
டெல்லியில் நடனமாடி கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
டெல்லி காவல்துறையில் தலைமை காவலராக பணிபுரிபவர் ரவிக்குமார். நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டார். அங்கு மகிழ்ச்சியாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரவிக்குமாரின் இறுதி தருணங்கள் தொடர்பான வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அவர் மற்றொரு நபருடன் சந்தோஷமாக நடனம் ஆடுகின்றார். சிறிது நேரம் கழித்து ரவிக்குமார் சிரித்துக் கொண்டே அங்கிருந்து ஒதுங்குவதை பார்க்க முடிகின்றது.
உடனே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விடுகிறது. உயிரிழந்த ரவி குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர் 2010 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகின்றார். 45 நாட்களுக்கு முன்பு தான் அவருக்கு ஆஞ்சியோகிராபியும் செய்யப்பட்டு இருந்தது. சமீப காலமாக நடனம் அல்லது நிகழ்ச்சியின் போதும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.