Latest News
பசுவை கடத்தியதாக… துரத்தி துரத்தி 12-ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற கும்பல்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!
காரில் பசுவை கடத்தி சென்றதாக எண்ணி 12-ம் வகுப்பு மாணவனை பசு பாதுகாப்பு கும்பல் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரியானாவில் காரில் பசுவை கடத்தியதாக நினைத்து 12-ம் வகுப்பு மாணவனை 5 பேர் சுட்டுக்கொலை செய்து இருக்கிறார்கள். அரியானா மாநிலம் பரிதாபாத் என்ற நகரில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு ரெனால்ட் டஸ்டர் மற்றும் டொயோட்டா பார்ட்சியூனர் என்ற கார்களில் பசு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சட்ட விரோதமான துப்பாக்கிகளுடன் கிளம்பிய 5 பசு பாதுகாப்பு குண்டர்கள் பட்டியல் சாலையில் வந்த ரொனால்டஸ்டர் டாக்ஸி காரை நிறுத்த முற்பட்டுள்ளனர்.
டாக்ஸி டிரைவர் காரை நிறுத்தாமல் சென்றிருக்கின்றார். இதனால் அந்த காரை 30 கிலோமீட்டர் துரத்தி சென்ற பசு குண்டர்கள் காருக்குள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் தனது நண்பர்களுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவன் ஆரியன் மிஸ்ரா மீது குண்டு பட்டு படுகாயம் அடைந்தார்.
கார் நின்ற பிறகும் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் ஆரியன் மார்பில் மேலும் ஒரு குண்டு பாய்ந்தது. பின்னரே தாங்கள் தவறான காரை பின் தொடர்ந்து வந்து தாக்கியுள்ளது தெரிய வந்தது. இதை அறிந்த பசு பாதுகாப்பு குண்டர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் ஆரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் தற்போது பசு பாதுகாவலரான ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.