Latest News
தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்… மத்திய அரசிடம் வலியுறுத்தும் சந்திரபாபு நாயுடு…!
ஆந்திரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி ஆணைகளில் இருந்து ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மாநிலத்தின் தலைநகரான அமராவதி நகரை வெள்ளம் சூழ்ந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளித்தனர். மேலும் புடமேரு ஆற்று வெள்ளமும், கிருஷ்ணா ஆற்று வெள்ளமும் விஜயவாடா நகரை சூழ்ந்தது. அங்கு இருக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
மழை வெள்ளத்தில் சிக்கிய உள்ளவர்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட அனைவரும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து வசதியும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. ஆந்திர பிரதேசம் விஜயவாடாவில் பெய்த கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் தனது அரசியல் வாழ்க்கையில் கண்ட மிகப்பெரிய பேரழிவு என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருக்கின்றார். மேலும் 32 பிரிவிகளுக்கு 32 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள கிராமங்கள் மற்றும் வார்டுகளுக்கு 179 அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டு மேற்பார்வை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று முதல் உணவு விநியோகத்திற்காக படகுகள், டிராக்டர்கள் மற்றும் வேன்கள் போன்ற அனைத்து போக்குவரத்து முறைகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. வெள்ள பாதிப்பு தொடர்பான அனைத்து அறிக்கைகளும் மத்திய அரசு அனுப்பப்படும் எனவும், இழப்பிலிருந்து மீள மாநிலத்திற்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.