Latest News
விபரீதத்தில் முடிந்த கொண்டாட்டம்…உயிர் பலி வாங்கிய சோக சம்பவம்…
தென்னாப்பிரிக்காவுடனான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டிகளில் வரிசையாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்திய அணி வீரர்கள் இம்முறை கோப்பையை வென்று அசத்தினார்கள். முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது தென்னாப்பிரிகா அணி.
விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இந்திய அணியின் திறமையை சமாளிக்க முடியாமல் பரிதாபமாக தோற்றது தென்னாப்பிரிக்க அணி. இந்தியாவின் இந்த அசத்தல் வெற்றியை நாடே தொடர்ந்து கொண்டாடி வருகிறது. திரைத் துறை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை இந்திய அணியை தொடர்ச்சியாக வாழ்த்தி வருகின்றனர்.
இந்திய அணியின் முக்கிய வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அங்காங்கே இன்னும் ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டு தான் வருகின்றார்கள். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் நடந்திருக்கிறது.
பட்டாசுகளை வெடிக்கச் செய்து மகிழ்ந்திருக்கின்றனர் உள்ளூர் வாசிகள். அதிக உற்சாகத்தில் அங்கே இருந்த சிறுவர்கள் சிலர் பட்டாசுகளின் மீது டம்ளர்களை அடுக்கி வைத்திருக்கின்றனர். பட்டாசோடு டம்ளரும் வெடித்து சிதறியுள்ளது.
அப்போது சற்று தொலைவிருந்து கொண்டாட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தீபக் தாக்கூர் என்ற ஐந்து வயது சிறுவன் மீது டம்ளரின் துகல்கள் பாய்ந்திருக்கிறது.
வலியால் அலறித்துடித்த அந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் அருகாமையிலிருந்த ஆஸ்பத்திரிக்கைக்கு தூக்கி சென்றிருக்கின்றனர். சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் சொல்லியிருக்கின்றனர். சிறுவனின் மரணத்தை அடுத்து அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.