Latest News
தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த மழை… 45 பயணிகளுடன் விடிய விடிய வெள்ளத்தில் தத்தளித்த பஸ்…!
தெலுங்கானாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையில் 45 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த கட்டணத்தை தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளம், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் பல இடங்களில் தண்ணீர் புகுந்தது. பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. சாலை எங்கும் மழை நீர் தேங்கி இருந்தது.
தெலுங்கானா மாநிலம் வராங்கள் மாவட்டம் வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி வெள்ள நீர் வெளியேறியதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதில் 45 பயணிகளுடன் ஒரு பேருந்து வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவிர்த்து வந்தது. தங்களை காப்பாற்ற செல்போன் வீடியோ மூலம் அதிகாரிகளுக்கும் உறவினர்களுக்கும் பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பேருந்தில் இருந்த பயணிகளை லாரியில் ஏற்றி கரை சேர்த்தனர். பேருந்தில் சிக்கிய பயணிகள் இரவில் உணவு, குடிநீர் எதுவும் இல்லாமல் குழந்தைகளுடன் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.