Latest News
கூட்டுப் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல் நிர்வாணமா ஆடவச்சு… போலீசை கண்டபடி திட்டிய நீதிமன்றம்…!
பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது மட்டும் இல்லாமல் நிர்வாணமாக ஆட வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.
மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரில் 5 ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமில்லாமல் நிர்மானமாக ஆட வைத்து சித்திரவதை செய்திருக்கின்றார்கள். இது தொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.
அந்த புகாரில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அவர் கடத்திச் சென்று குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இயற்கைக்கு மாறான வல்லுணர்வுக்கும் ஆளாக்கி இருக்கிறார்கள். அதன் பின் தொலைக்காட்சி பார்த்த அவர்கள் தன்னை பெல்டால் அடித்து வற்புறுத்தி அரை மணி நேரம் நிர்வாணமாக ஆட வைத்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
19 நாட்களுக்கு முன்பு அந்த பெண் போலீசில் இது குறித்து புகார் அளித்து இருக்கின்றார். ஆனால் போலீசார் இந்நாள் வரை எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் இருந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, பாஜக போலீசை நடவடிக்கை எடுக்காமல் தடுக்கின்றது என்று குற்றம் சாட்டை இருந்தார்கள்.
இதற்கு பதில் அளித்த அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா அரசியல் சார்புகள் எதுவாக இருப்பிடம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தப்படும் என்று துணை ஆணையர் அபிநய் விஸ்வகர்மா தெரிவித்திருக்கின்றார். இந்த வழக்கில் குற்றம் சாட்டபவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீதிமன்றம் கண்டித்த பிறகு போலீசார்கள் எஃப்ஐஆர் பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.