Connect with us

மட்டன் பீசுக்காக அடிச்சுகிட்டு சண்டை… திருமண வீட்டில் கலவரம்… 8 பேர் படுகாயம்…!

Latest News

மட்டன் பீசுக்காக அடிச்சுகிட்டு சண்டை… திருமண வீட்டில் கலவரம்… 8 பேர் படுகாயம்…!

திருமண வீட்டில் மட்டன் பீஸ்காக சண்டை போட்டதில் எட்டு பேருக்கு படுகாயம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.

நிஜாமாபாத், நவிபேட் பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற திருமண விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் ஆட்டு இறைச்சி துண்டுகள் இல்லாததால் மணமக்களின் உறவினர்கள் ஒருவருக்கு ஒருவர் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளக பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நிஜாமாபாத் பகுதில் ஒரு பொண்ணுக்கும், நந்திப்பேட் பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கும் திருமணம் நடைபெற்று நிலையில் திருமணத்திற்கு பிந்தைய கொண்டாட்டத்தின் போது தான் இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. மணமகனின் உறவினர்கள் குறைந்த அளவு ஆட்டு இறைச்சி துண்டுகள் வழங்கப்பட்டதாக புகார் கூறியிருக்கிறார்கள்.

இது மணமகள் மற்றும் மணமகன் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரு தரப்பினரும் சமையல் கரண்டி, கற்கள், கட்டைகள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் காயமடைந்த எட்டு பேரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

More in Latest News

To Top