Latest News
கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கிய சிவாஜி சிலை… தலை குனிந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி…!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்ரபதி சிவாஜி சிலை கீழே விழுந்து நொறுங்கியதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதூர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சமீபத்தில் இடிந்து விழுந்தது. இதற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கின்றார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது “சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசோ இல்லை. நமக்கு அவர் தெய்வம், இன்று நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன்.
என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கின்றேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை, எங்களை பொறுத்தவரை எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை. சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் அவரை அவமதிப்பதற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும் சிலை இடிந்து விழுந்தது.
இது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன். பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும் முழு நாடும் பெறுவதை உறுதி செய்வதற்காகத்தான் வத்வான் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது” என்று பிரதமர் மோடி தெரிவித்து இருக்கின்றார்.