Latest News
ஆடு மேய்க்க வந்த சிறுமி… முட்டாய் கொடுத்து ஏமாற்றி பாஜக நிர்வாகி செய்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…!
ஆடு மேய்க்க வந்த சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி அவரை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லாமல் இருந்து வருகின்றது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என்று யாரையும் விட்டு வைப்பதில்லை. தொடர்ந்து பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அரங்கேறி கொண்டு இருக்கின்றது .இது தொடர்பாக பல போராட்டங்கள் நடைபெற்றாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படி ஒரு கொடுமை தான் தற்போது நடந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா என்ற மாவட்டத்தில் உள்ள சாலட் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற 14 வயது சிறுமிக்கு பாஜக மண்டல தலைவர் பகவத்சிங் போரா பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது.
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சாலட் பகுதியில் தனது சகோதரருடன் ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கின்றார் பகவத்சிங் போரா. அவரிடமிருந்து தப்பிய அந்த குழந்தை தனது தாயிடம் இது தொடர்பாக கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இரவு பகவத்சிங் போரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையின் தற்போது அவரை கட்சியிலிருந்து நீக்கி பாஜக மாநில தலைமை உத்தரவிட்டிருக்கின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.