Latest News
பாத்துதான் ஆர்டர் பண்ணனுமா பானி பூரியை!…ஷவர்மா சாப்பிடுறது தவறாமா?…..உணவு பாதுகாப்பு துறை கொடுத்துள்ள அதிர்ச்சி ரிப்போர்ட்…
எதிலும் அவசரம், எங்கும் அவசரம் நிற்கக் கூட நேரம் கிடையாது. இது தான் இன்றைய நிலையாக இருக்கிறது நம்மில் பலரின் வாழ்க்கையின் போக்கு. குடும்பத்தினருடன் நேரம் செலவளிப்பது அரிதாக மாறி வருகிறது சிலருக்கு. ஏதாவது வேலை, எப்போதும் பிஸி , டென்ஷன், ப்ரஸர் என எதிர்காலத்தை வலிமைப்படுத்தும் நோக்கில் தான் இதனை எல்லாம் சுகமான சுமைகளாகவே பார்த்து வருகிறது இன்றைய இளைய தலைமுறை.
உணவு விஷயங்களில் இருந்து நடைமுறைகளையும் மாற்றி அமைத்து விட்டது நாகரீக வாழ்க்கை. நேரத்திற்கு சாப்பிடுவது என்பது பலருக்கும் கனவாகவே மாறிவிட்டது என்று சொன்னால் கூட அது மிகையாகதது தான். ஃபாஸ்ட் ஃபூட் காலம் இது. கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு வேலையை பார்த்து வருவது வழக்கமாகி விட்டது.
சைனீஸ் வகை உணவுகளின் ஆதிக்கம் இப்போதெல்லாம் அதிகமாகி விட்டது என சொல்லபடுகிறது. பாரம்பரிய உணவுவகைகள் மீதான கவனம் மீண்டும் ஒரு பக்கம் திரும்பிவருவதாக பார்க்கப்பட்டாலும், ஃபாஸ்ட் ஃபூட் உணவுகளை அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி விடுகிறது. கர்நாடகா உணவு பாதுகாப்புத் துறை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின் முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து பானி பூரிக்களின் மாதிரிக்கள் எடுக்கப்பட்டு அதன் மீது சோதனையும், ஆய்வும் நடத்தப்பட்டிருக்கிறது.
இரு நூற்றி அறுபது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டதில், நாற்பத்தி ஓரு மாதிரிக்கள் புற்று நோய் விளைவிக்கக் கூடியதாகவும், பதினெட்டு மாதிரிகள் உண்பதற்கு தகுதியற்றவைகளாக இருந்துள்ளது. உணவில் சுவையை அதிகரிக்கை செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவதாகவும், அது கேன்சரை உண்டாக்கும் அபாயம் கொண்டவைகள் என்ற அதிர்ச்சி தரும் செய்தி வந்திருக்கிறது. இதே போல தான் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய செயற்கை பொருட்கள் ஷவர்மா சமைக்கும் சேர்க்கப்படுவதாகவும் சொல்லியிருக்கிறது கர்நாடக உணவு பாதுகாப்புத்துறை.