ஆந்திராவில் மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்த நிலையில் அனைவரும் தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் ஆறு, குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்தது சுமார் 65 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியது.
விஜயவாடா, மொகல்ராஜபுரம் மலையில் தற்போது வரை இடைவிடாமல் பெய்து வந்த மலையின் காரணமாக பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் வீடுகளின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் உடல் நசுங்கி ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். தொடர் மழையின் காரணமாக உப்பில்லாவில் உள்ள பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
அப்போது ஆசிரியர் ராகவேந்திரா மாண்விக், சவுரிஸ் என்ற மாணவர்களை ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஆற்றுப்பாலத்தை கடக்க முயன்றிருக்கின்றார். அப்போது பாலத்தில் அதிக மழை வெள்ளம் சென்றதால் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மழையில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திரா அரசு அறிவித்து இருக்கின்றது.

