Connect with us

ரொம்ப சீக்கிரமா டெலிவரி பண்ணிட்டீங்களே… 2 ஆண்டுகளுக்கு பின் வந்த பார்சல்… ஷாக்கான பயனர்…!

Latest News

ரொம்ப சீக்கிரமா டெலிவரி பண்ணிட்டீங்களே… 2 ஆண்டுகளுக்கு பின் வந்த பார்சல்… ஷாக்கான பயனர்…!

2 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட ஆர்டரை சமீபத்தில் ஒரு நபர் பெற்றதாக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை ஒரே நாளில் டெலிவரி செய்வது என்பது தற்போது வழக்கமாகி வரும் நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட ஆர்டரை சமீபத்தில் திரும்ப பெற்றதாக ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றார். ஜெய் என்பவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமேசானில் பிரஷர் குக்கர் ஒன்றை ஆர்டர் செய்திருக்கின்றார்.

பின்னர் அவர் அந்த ஆர்டரை ரத்து செய்து பணத்தையும் திரும்ப பெற்றுள்ளார். ஆர்டரை ரத்து செய்த போதிலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்டர் செய்த பொருள் அவர் வீட்டிற்கு வந்திருக்கின்றது. இதையடுத்து அவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எனது ஆர்டரை வழங்கியதற்கு நன்றி அமேசான் என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார்.

அவரது பதிவில் பிரஷர் குக்கர் அக்டோபர் 1 2022 அன்று ஆர்டர் செய்யப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 28, 2024  அன்று ஆர்டரை பெற்றிருக்கின்றார். இது மிகவும் சிறப்பான பிரஷர் குக்கராக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவிதமாக கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.

More in Latest News

To Top