Latest News
இந்த வருடத்தின் இரண்டாவது புயல்…? இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை…!
இந்த வருடத்தின் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.
மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்க கடலில் இன்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. மேலும் இது வடக்கு மற்றும் தெற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கரையோர பகுதியை அடுத்து இரண்டு தினங்களில் நெருங்குவதற்கு வாய்ப்புள்ளது.
அதன்படி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. இந்நிலையில் இந்த ஆண்டில் இரண்டாவது புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.
சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டிருக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக்கடலை அடைந்து நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது. கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் புயலாக வலுப்பெற்று அடுத்து இரண்டு நாட்களில் இந்திய கடற்பரப்பை விட்டு நகர்ந்து வடகிழக்கு அரபிக் கடலை அடைய கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கின்றது.
கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால் புயல் உருவான நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது புயலாக இது உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் உருவானால் பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது.