Connect with us

கடத்திச் சென்றவரை விட்டுப்பிரிய மனமில்லாமல்… அழுது அடம்பிடித்த குழந்தை… வைரலாகும் பாசப் போராட்டம்…!

Latest News

கடத்திச் சென்றவரை விட்டுப்பிரிய மனமில்லாமல்… அழுது அடம்பிடித்த குழந்தை… வைரலாகும் பாசப் போராட்டம்…!

கடத்திச் சென்றவரை விட்டு பிரிய மனமில்லாமல் அழுது அடம்பிடித்த குழந்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் தன்னை கடத்தியவரை விட்டு தாயிடம் செல்ல மறுத்து இரண்டு வயது குழந்தை கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்திருக்கின்றது. ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்தில் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிரித்வி என்ற 11 மாத குழந்தை கடத்தப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து குழந்தையை குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார் கடந்த புதன்கிழமை அன்று குழந்தையையும் குழந்தையை கடத்தியவரையும் கண்டுபிடித்தனர். கைதான தனுஜ் சஹார் கடத்தப்பட்ட குழந்தையின் தாய் வழி உறவினர் ஆவார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தையை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. கைதான தனுஜ் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர்.

அவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ரிசர்வ் போலீஸ் லைனில் தலைமை காவலராக பணியாற்றியவர். தற்போது அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கின்றார். தனுஜ் முன்பு காவல்துறையின் சிறப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழுவில் இருந்தவர் என்பதால் போலீஸ் நடைமுறைகளை நன்கு அறிந்து தலைமுறைவாக இருந்து வந்திருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் மொபைல் ஃபோனை பயன்படுத்தாமல் இருந்திருக்கின்றார்.

பிடிபடுவதை தவிர்ப்பதற்காக அவர் தனது இருப்பிடத்தையும் அடிக்கடி மாற்றி வந்திருக்கின்றார். இருப்பினும் நீண்ட தேடுதலுக்கு பிறகு தனுஜ் கைது செய்யப்பட்டார். 14 மாதங்கள் அந்த கடத்தப்பட்ட நபருடன் குழந்தை வளர்ந்த நிலையில் அவரிடம் இருந்து தாயிடம் செல்ல மறுத்து அந்த குழந்தை அழுது அடம்பிடித்தது. இதைபார்த்த குற்றவாளியும் அழுதார். இந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.

More in Latest News

To Top