Latest News
Youtube-ஐ பார்த்து ஆப்ரேஷன்… போலி மருத்துவரின் செயலால்… 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!
போலி மருத்துவர் ஒருவர் youtube ஐ பார்த்து 15 வயது சிறுவனுக்கு ஆபரேஷன் செய்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்தியாவில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. சித்த வைத்தியம் பயின்ற சிலர் தான் டாக்டர் படிப்பை முடித்து விட்டதாக கூறி கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர்களை போலீஸார்கள் அவ்வபோது பிடித்துக் கொண்டு இருந்தாலும் தொடர்ந்து போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
அப்படி போலி மருத்துவர் ஒருவரின் செயலால் 15 வயது சிறுவனின் உயிர் பரிதாபமாக போயிருக்கின்றது. பிஹார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பையில் கல்லை அகற்றுவது எப்படி என்று யூடியூப் ஐ பார்த்து போலி மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்திருக்கின்றார். இந்த சிகிச்சையின் போது 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தங்களது ஒப்புதல் இன்றி மருத்துவர் அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையை தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து போலி மருத்துவர் தற்போது தலைமறைவாக இருக்கின்றார். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.