நாம் தினந்தோறும் சமைக்கும் பொழுது சிறு சிறு தவறுகள் ஏற்படுவது சகஜம். சைவ உணவானாலும் சரி, அசைவ உணவானாலும் சரி, வீடுகளில் தொடங்கி பெரிய பெரிய ஹோட்டல்கள் வரை உப்பு சரி பார்ப்பதில் சிறு தவறுகள் வரத்தான் செய்யும். அதிலும் நாம் சமைத்த உணவில் உப்பு அதிகமானால், அவ்வளவு தான். இதை எப்படிக் கையாள்வது என்பது அனைவருக்கும் பெரும் குழப்பமாக இருக்கும்.
இதனை ஒரு சில நொடிகளிலே வீட்டிலுள்ள உணவு பொருள்களை வைத்து சரிசெய்துவிடலாம். வீட்டில் உருளைக்கிழங்கு இல்லையென்றால் பிரெட் இது இருந்தாலே போதும் உப்பை உணவில் இருந்து குறைத்துவிடலாம்.

உருளைக்கிழங்கை பொருத்தவரை உப்பு போடாமல் வேகவைத்து பின்பு அதனை குழம்பிலோ, பொரியலிலோ மசித்து சேர்த்து விடலாம். உருளைக்கிழங்கை இல்லை என்றால் பிரட் தூளை சேர்த்து கிளறினால் போதும். உருளைக்கிழங்கு, பிரட் இவை இரண்டுமே உப்பை உள்வாங்கிக் கொண்டு உணவை அதே சுவையுடன் வைத்திட உதவும். மறக்காமல் இதனை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். சமையலறையில் எந்த உணவும் வீணாகாது.