Prakash Raj
Prakash Raj

சண்டே மசாஜ் – வீடியோ வெளியிட்ட பிரபலம்

144 தடை உத்தரவை இந்திய அளவில் அனைத்து மாநிலங்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நடுத்தர மக்கள் முதல் பிரபலங்கள் வரை வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனையடுத்து வீட்டில் முடங்கி இருக்கும் இளசுகள் முதல் பெரிசுகள் வரை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், முதலிய சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக உள்ளனர். அந்தவகையில், திரைப்பிரபலங்கள் ஒரு படி மேலே சென்று விட்டனர். அவர்களின் குடும்ப புகைப்படங்கள், வீட்டு வேலை செய்வது போன்ற வீடியோக்கள், தினசரி ஆக்டிவிட்டீஸ்கல என்று அனைத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நம்ம கில்லி பட வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் தன் மகனுடன் சண்டே மசாஜ் செயத வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ”ஞாயிற்றுக்கிழமை எனது பண்ணை தோட்டத்தில் என் மகன் என்னை சிறுவயது நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். நான் ஒரு குழந்தையாக என் அப்பா முதுகு மீது எறி நடந்தது எனக்கு ஞாபகம் வந்துவிட்டது, மிகவும் பேரின்பத்தை அடைந்திருக்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் தங்களின் நினைவுகளையும் பதிவிட்டுள்ளனர்.